ராமர் ராமேஸ்வரத்தில் வழிபட்டது ஏன் வால்மிகி ராமாயணத்தில் இல்லை ??

உ சிவமயம் ராமர்,ராவணனை வதம் செய்தவுடன்,அவருக்கு பிரம்மஹத்தி ஏற்பட்டதாகவும்,அதனால் அவர் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு,பிரம்மஹத்தியை போக்கியதாக சைவ நூல்கள் கூறுகின்றன…ஆனால்,வைணவர்கள் கூறுகின்றனர் ,இது சைவர்கள் கட்டிவிட்ட கதையென்றும் ,வால்மிகி ராமாயணத்தில் இல்லையென்றும் பதில் கூறுகின்றனர்…வைணவர்களுக்கு,இராமரின் சிவவழிபாடு எவ்வளவு நிந்திதமோ,அவ்வளவு வந்திதம் ராம நாமத்தின் தாரகத்துவம்…ராம நாமம் தாரக மந்திரம் என்பது உண்மையென்றால்,அதனை கூற வால்மிகி ராமாயணத்தைவிட சிறந்த நூல் இருக்க முடியாது…ஆனால்,வால்மிகி ராமாயணத்திலோ,ராம நாமம் தாரக மந்திரம் என்ற ஒரு சிறு குறிப்புமில்லை…நிலை இப்படியிருக்க,வால்மிகி ராமாயணத்தில் குறிக்கப்படாமல்…

விஷ்ணு விபூதி ருத்ராக்ஷம் அணிபவரே- ஆழ்வார்களின் பாடல்களிலிருந்து ஆதாரங்கள்

உ சிவமயம் “தாழ்சடையு நீண்முடியு மொண்மழுவுஞ் சக்கரமுஞ் சூழரவும் பொன்னாணுந் தோன்றுமாற் -குழுந் திரண்டருவி பாயுந் திருமலைமே லெந்தைக் கிரண்டுருவு மொன்றா யிசைந்து” –   (நம்மாழ்வார்) “பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து ” – (திருமங்கையாழ்வார்) மேலுள்ள நம்மாழ்வார் பாடலில் சிவபெருமானும் விஷ்ணு மூர்த்தியும் ஒவ்வோர் பாதித் திருமேனியை உடையவராய்ச் சேர்ந்து ஒரு வடிவராய் இருக்கின்றனர் என்று அறியலாம்…திருமங்கையாழ்வார் பாடலில் வலப்பாகத் திருமேனி சிவபெருமானாகவும் இடப்பாகத் திருமேனி நாராயண மூர்த்தியாக இருக்கின்றனர்…