இந்தியாவில் தோல்வியுற்ற அரபு இஸ்லாமிய படையெடுப்புக்கள்

சிவமயம்

 

அரபு முஸ்லிம்கள்,நம் நாட்டில் ஒரு ஆட்சியை அமைக்கக் கூட முடியவில்லை என்பதே சரித்திரம் நமக்கு உணர்த்தும் உண்மை…மிகவும் பிற்காலத்தில் தான்,இஸ்லாத்தை சார்ந்த மொங்கோலிய துர்க்கி நாடோடி கூட்டங்களான முகாலயர்கள் இந்த நாட்டில் ஆட்சி அமைத்தனர்..ஆனால், அசல் மற்றும் முதல் இஸ்லாமிய சமூகமான அரபுகள்,நம் நாட்டில் ஆட்சி மட்டும் அல்ல,நம் நாட்டில் சில பகுதிகளைக் கூட கைப்பற்ற முடியவில்லை என்பதே உண்மை…அரபுகள் நம் நாட்டின் மீது பல தடவை படையெடுத்தும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது…அந்த வரலாற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்…

உமர் கலிப்பா (கிபி 634-644) காலத்தில், மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத் கடல் எல்லையில், முஸ்லிம்களின் கடல் வழி படையெடுப்பு முறியடிக்கப்பட்டு,விரட்டப்பட்டது….இந்த தோல்வியில் முடிந்த படைப்புக்கு பிறகு,சிந்து தேசம் மீது இஸ்லாமியர்கள் படையெடுத்தார்கள்..ஆனால்,இந்த படையெடுப்பும் தோல்வியில் முடிந்தது…அரபு படையின் தளபதி,முகைரா,அந்தப் போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்…உமர்,தரைவழி ஒரு படையை ,சிந்து தேசத்தின் மக்ரான் நகரத்தை கைப்பற்ற அனுப்பலாம், என்று முடிவு செய்தான்..ஆனால்,ஈராக் மாநில ஆட்சித் தலைவன்,”ஹிந்தை (இன்றைய இந்தியா) கைப்பற்றும் எண்ணத்தை விட்டு விடுங்கள்” என்று உமருக்கு அறிவுரை கூறினான்…அடுத்த கலிப்பாவான,உஸ்மான் (கிபி 646-656) , உமருடைய வழியையே பின்பற்றி,சிந்து தேசத்துக்கு எதிராக கடல்வழியோ தரைவழியோ,எந்தவொரு படையையும் அனுப்பவில்லை…நான்காவது கலிப்பாவான அலி,(கிபி 656-661), தரைவழி படையை,கிபி 660இல் சிந்து தேசத்துக்கு எதிராக அநுப்பினான்…ஆனால் அந்த படையெடுப்பும் பெரும் தோல்வியில் முடிந்தது…அந்த அரபு படையின் தளபதியும் பல படைவீரர்களும், கொல்லப்பட்டனர்,கிபி 662இல் ….சிலர் மட்டுமே தப்பித்தோடினர்..இஸ்லாத்தின் முதல் நான்கு “மேன்மையான” கலிப்பாக்கள்,சிந்து தேசத்தையோ இந்தியாவையோ வெற்றிக் கொள்ளாமலேயே இறந்தனர்…

அடுத்த கலிப்பாவான முவாவியா (கிபி 661-680),தரைவழி ஆறு படையெடுப்புக்களை அனுப்பினான்….இந்த் படையெடுப்புகளில்,ஒன்றை தவிர மற்றவை படுதோல்வியில் முடிந்தன…கிபி680இல் , கடைசி படையெடுப்பு மட்டுமே மக்ரன் நகரத்தை கைப்பற்றுவதில் வெற்றி கண்டது…
அடுத்த 28 வருஷங்களுக்கு,சிந்து தேசத்துக்கு எதிராக ஒரு படையெடுப்பையும் அனுப்ப அரபுகள் நடுங்கினர்…28 வருஷங்களுக்குப் பிறகு,சிந்து தேசத்தின் தெபால் நகரை கைப்பற்ற, அரபுகள் படையெடுத்தனர்…அந்த படைக்கு தலைமை தாங்கியவர்கள் உபைதுல்லா மற்றும் புதயில் என்பவர்கள்…இந்த இரண்டு தளபதிகளும் கொல்லப்பட்டு,அந்த அரபு படை விரட்டியடிக்கப்பட்டது…ஹஜாஜ் எனும் ஒரு ஈராக் மாநில ஆடியாளன்,கலிப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி,இன்னுமொரு படையை அனுப்புமாறு கேட்டுக் கொண்டான்…ஆனால்,கலிப்பாவோ ” இந்த படையெடுப்பு நமக்கு மிகுந்த அச்சம் மூட்டுவதாக உள்ளது,ஆகையினால் இதை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும்..ஒவ்வொரு தடவையும் சிந்து தேசத்துக்கு படையெடுத்துப் போகும் முஸ்லிம்கள்,பெரிய அளவில் கொல்லப்படுகின்றனர்..இனிமேல்,இந்த விவகாரத்தைப் பற்றி நாம் சிந்திக்கக் கூடாது” என்று மறுப்பு கடிதம் அனுப்பினான்…

 

ஆனால் ஹஜாஜ் என்பவனோ,விடுவதாக இல்லை…அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு,சிந்து தேசத்துக்கு எதிராக இதுவரை அநுப்பப்பட்ட படைகளைவிட ஒரு மிகவும் பலமான படையை உருவாக்கும் முயற்சியில் இறங்கினான்…கிபி 712இல்,முகமது பின் காஸீம் எனும் தனது மருமகனை அந்த படைக்கு தளபதியாக அனுப்பினான்..”அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறுகிறேன், ஈராக்கின் முழு சொத்தையும் இந்த படைக்காக செலவிட வேண்டுமென்றாலும்,அதனை செய்வேன்” என்று உறுதி கூறினான்…முகமதி பின் காஸீம்,சிந்து மாநிலத்தில் எழுந்த பல கடுமையான எதிர்ப்புக்களை சமாலித்து,வெற்றி நடை போட்டுக் கொண்டு சென்றான்…சிந்து தேசத்திலுள்ள சில நகரங்களில்,சில துரோகிகளும்,அவன் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தனர்..கிபி 713இல்,சிந்து தேசம் முழுவதையும் ஆக்கிரமித்தான்..ஆனால் கிபி714இல், மறுபடியும் தன் நாட்டுக்கு அழைக்கப்பட்ட பிறகு, சிந்து தேசத்து மக்கள் எழுச்சிப் பெற்று,முஸ்லிம் ஆட்சியை தூக்கு எறிந்தனர்…தெபாப்புரம் எனும் கடலோறப் பகுதி மட்டுமே கலிப்பாவின் ஆட்சியின் கீழ் இருந்தது..இது ஒரு மிகவும் சிறிய பகுதி மட்டுமே…

 

சில காலங்களில்,மறுபடியும் சிந்து தேசத்தை கைப்பற்றி,ராஜபுத்தானாவின் வழி,உஜ்ஜைனி வரை முஸ்லிம் படை வெற்றி நடை போட்டது…ஆனால் முஸ்லிம்களின் இந்த வெற்றி,ஒரு முடிவுக்கு வந்தது…தெற்கு குஜராத்தை ஆண்ட புலகேசி என்ற ஒரு சாலுக்கிய மன்னர் முஸ்லிம் படையின் வெற்றியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்..நவசரி என்ற ஒரு கல்வெட்டு (கிபி 738), புலகேசி ஒரு அரபு படையை தோற்கடித்து விரட்டிய செய்தியை நமக்கு கூறுகிறது…இந்த வெற்றி,புலகேசிக்கு “தென்னகத்தின் வயிரத் தூண்” என்ற பட்டத்தையும் “முறியடிக்க முடியாதவரை முறியடித்தவன்” என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது.. குர்ஜர ப்ரதிஹார மன்னனான முதலாம் போஜரின் ,குவாலிய கல்வட்டு , அந்த அரசை உருவாக்கிய முதலாம் நாகபட்டன் என்ற மன்னன்,தன் தேசத்தை தாக்க வந்த ஒரு பலம் பொருந்திய மிலேச்சனை தோற்கடித்ததாக கூறுகிறது..
குர்ஜர ப்ரதிஹார மன்னர்களை,அரபு சரித்திராசிரியர்கள் “ஜுர்ஸ் மன்னர்கள்” என்றழைப்பார்கள்…. இந்த குர்ஜர மன்னர்களில் ஒருவரை,ஒரு அரபு சரித்திராசிரியர் இவ்வாறு கூறுகிறார், ” இந்திய நாட்டின் மன்னர்களின்,முகமதிய நெறிக்கு , இவரைவிட சிறந்த எதிர்ப்பாளர் எவரும் இல்லை” …

 

ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல் : Sita Ram Goel’s “Heroic Hindu Resistance to Muslim Invaders”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s